நுவரெலியா நோக்கிச் சென்ற பேருந்து விபத்து : ஐவர் ஆபத்தான நிலையில் அனுமதி!

#SriLanka #Accident #Bus #Lanka4
Thamilini
2 years ago
நுவரெலியா நோக்கிச் சென்ற பேருந்து விபத்து : ஐவர் ஆபத்தான நிலையில் அனுமதி!

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்து இன்று (08.01) அதிகாலை ஹட்டன் பிரதான வீதியின்  வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது

இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்து வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், படுகாயமடைந்த 5 பேர் ஆபத்தான நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எதிர்திசையில் இருந்து வந்த பேரூந்து ஒன்றுக்கு வழிவிட முற்பட்ட போது பேருந்து வீதியை விட்டு சறுக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.  

 காயமடைந்த ஏனையவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வட்டவளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 100 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!