ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்க நடவடிக்கை!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
ஐக்கிய தேசியக் கட்சியை புதிய கண்ணோட்டத்துடன் பிரபலப்படுத்தும் வகையில் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்காக எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி கட்சி மாநாடு நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மநாட்டில் புதிய அரசியலமைப்புச் சட்டமொன்று ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் சிறிகொத்தா வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன.
இந்த நிகழ்வில் ஆறு மூத்த துணைத் தலைவர்கள் அடங்கிய தலைமைக் குழு நியமனம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, சாகல ரத்நாயக்க, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் இந்த அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகிகளிலும் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.