இலங்கையில் தொழிலை இழந்த மில்லியன் கணக்கான இளைஞர்கள்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
உள்ளூர் கட்டுமானத் துறையில் 1.2 மில்லியன் நேரடி வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை கையாளும் நாடாளுமன்றக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
மறைமுக வேலை இழப்புடன் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறும் குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.
வேலையிழப்புக்கு கூடுதலாக, கட்டுமான நிறுவனங்கள் தங்கள் மதிப்புமிக்க இயந்திரங்களை வெளிநாடுகளில் விற்க விளம்பரம் செய்துள்ளன என்றும், அவர்கள் மேற்கொண்ட சாலை மற்றும் பிற கட்டுமானப் பணிகளுக்காக இந்த நிறுவனங்களுக்கு பல பில்லியன் ரூபாய்களை அரசு செலுத்த வேண்டியுள்ளது எனவும் குறித்த குழு தகவல் அளித்துள்ளது.