சுற்றுலா சட்டம் அமுல்படுத்தப்படவில்லையென குற்றச்சாட்டு
#SriLanka
#Tourist
Prathees
2 years ago
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் சில முகவர் நிலையங்கள் பயிற்சியற்ற சுற்றுலா வழிகாட்டிகளை வேலைக்கு அமர்த்துவது சுற்றுலாத் துறையை வீழ்ச்சியடையச் செய்துள்ளதாக தேசிய சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
பயிற்சி பெறாத சுற்றுலா வழிகாட்டிகள் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வழிகாட்டிகளை வழங்காமையால் நாடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாக அதன் தலைவர் மனோஜ் மத்தகே தெரிவித்துள்ளார்.
இதனால் சுற்றுலாத்துறை தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார்.
இந்த நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பதற்காக நாட்டில் சுற்றுலா சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.