ஆஷஸ் தொடரில் 150 விக்கெட்களை எடுத்து சாதனை படைத்த ஸ்டூவர்ட் பிராட்

#Test #Cricket #England
Prasu
2 years ago
ஆஷஸ் தொடரில் 150 விக்கெட்களை எடுத்து சாதனை படைத்த ஸ்டூவர்ட் பிராட்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆசஷ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. 

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 283 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 293 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் 2 விக்கெட் கைப்பற்றினார். 

இதன்மூலம் அவர் ஆசஷ் தொடரில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். அவர் ஆசஷ் தொடரில் 40 போட்டிகளில் விளையாடி 151 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

 ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் வார்னே 36 போட்டிகளில் 195 விக்கெட்டும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 30 போட்டிகளில் 157 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!