இன்று மாலை மாமல்லபுரத்துக்கு ஜி20 நாட்டு பிரதிநிதிகள் வருகை

#India #Tamilnews #Breakingnews #ImportantNews #Chennai
Mani
2 years ago
இன்று மாலை மாமல்லபுரத்துக்கு ஜி20 நாட்டு பிரதிநிதிகள் வருகை

சென்னை வந்துள்ள ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் 120 பேர் கொண்ட குழு இன்று மாலை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரத்துக்கு வருகை தருகிறது. மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்ளனர். இதையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னம் மற்றும் கடற்கரையை சுற்றியுள்ள பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் செல்லும் பாதை, பழங்கால சின்னங்கள், உணவருந்தும் ஓட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகை காரணமாக புராதன சின்னங்களுக்கு முன்னால் உள்ள சாலையோரக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், மாமல்லபுரத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு "டிரோன்" கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4