எலான் மஸ்க் டுவிட்டர் எக்ஸ் இலச்சினையையும் சிறிது மாற்றம்

#Twitter #Lanka4 #technology #ElonMusk #தொழில்நுட்பம்
எலான் மஸ்க் டுவிட்டர் எக்ஸ் இலச்சினையையும் சிறிது மாற்றம்

டுவிட்டரின் எகஸ் இலச்சினையை அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நீலக் குருவியிலிருந்து மாற்றிய பின் மீண்டும் தற்போது அந்த எக்ஸ் இலச்சினையில் சில மாற்றங்களை செய்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே, அதில் பல அதிரடி மாற்றங்கலை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். அந்த மாற்றங்கள் தனித்துவம் அளித்து வணிக ரீதியாக கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அதனை செய்து வருகிறார். 

 அந்தவகையில் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் புகழ் பெற்ற நீல நிற குருவியின் இலச்சினையை மாற்றி கருப்பு - வெள்ளை நிறத்தில் எக்ஸ் இலச்சினையை அறிமுகம் செய்தார். இந்த மாற்றம் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

 எனினும் எலான் மஸ்க் தொடர்ந்து இலச்சினை இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தற்போது எக்ஸ் இலச்சினையில் சில மாற்றங்களை செய்துள்ளார்.

ஏற்கனவே உள்ள எக்ஸ் இலச்சினையை சற்று அடர்த்தியாக இறுதி வடிவம் கொடுத்துள்ளார் எலான். மேலும் டுவிட்டுக்கள் அனைத்தும் இனி வரும் காலங்களில் எக்ஸ்க்கள் என அழைக்கப்படும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4