கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

#India #Tamil Nadu #Tamilnews #Breakingnews #River
Mani
2 years ago
கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் வேகமாக நிரம்பின. மேலும், கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு உயர்த்தப்பட்டதையடுத்து, கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு மொத்தம் 17,688 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து முதற்கட்டமாக காலை 11,250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்ட தண்ணீர் இன்று தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வந்து சேருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4