மணிப்பூர் பாலியல் வன்கொடுமை - அமெரிக்கா கண்டனம்

#India #Women #America #Abuse
Prasu
2 years ago
மணிப்பூர் பாலியல் வன்கொடுமை - அமெரிக்கா கண்டனம்

மணிப்பூரில் மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. இந்த சூழலில், மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் பழங்குடி சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோ வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், டைலி மெயில் போன்ற உலக நாடுகளின் முக்கிய பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது:- மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடத்தபட்ட வன்முறை மிருகத்தனமானது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அமெரிக்கா தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. மணிப்பூர் வன்முறைக்கு அமைதியான தீர்வை அமெரிக்கா விரும்புகிறது.

 அனைத்து குழுக்கள், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் மனிதாபிமான தேவைகளுக்கு பதிலளிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறது என கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4