அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

#India #Tamil Nadu #Rain #HeavyRain #Tamilnews
Mani
2 years ago
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது.

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 28 மாவட்டங்களில் மிதாமன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4