ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 22 பேர் உயிரிழப்பு
#India
#Afghanistan
#world_news
#Rain
#HeavyRain
#Tamilnews
Mani
2 years ago

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள வார்டாக் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள வார்டக் மாகாணத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்தது, இதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்கு பல வீடுகள் சேதமடைந்தன. மேலும் அங்குள்ள ஜல்ரேஸ், சாக், ஜகாதோ உள்ளிட்ட பல நகரங்களில் பரந்து விரிந்த விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்த வெள்ளப்பெருக்கால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேருக்கு காயம் ஏற்பட்டது. காணாமல் போன மேலும் பலரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



