புனே மற்றும் ராய்காட் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
#India
#Rain
#HeavyRain
#Tamilnews
Mani
2 years ago
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தற்போது பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் புனே, கோலாப்பூர், ராய்காட் மற்றும் பிற மாவட்டங்களில் ஜூலை 27 ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராய்காட், ரத்னகிரி, சிந்துத்ரக், புனே, கோலாப்பூர் மற்றும் சதாரா மாவட்டங்களில் ஜூலை 27 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையிலும் நாளை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.