டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டியுள்ளது

#India #Delhi #Rain #HeavyRain #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டியுள்ளது

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், பல வட மாநிலங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று (திங்கட்கிழமை) இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போதைய மழை நிலைமைகள் குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் 206.56 மீட்டராக அதிகரித்து, மீண்டும் அபாய அளவை தாண்டியுள்ளது. நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 206.44 மீட்டராக இருந்த யமுனையின் நீர்மட்டம் இன்று காலை சற்று அதிகரித்து அபாய எல்லையை தாண்டி உள்ளது. யமுனையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீண்டும் வெள்ளம் போல் தண்ணீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4