அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

#India #Rain #HeavyRain #Tamilnews #ImportantNews #Cyclone
Mani
2 years ago
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை மழை பெய்து வருகிறது. டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து, மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் வட மாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிக கனமழை தொடரும்.

இதனால் வட மாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும். ஒடிசா, கோவா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!