கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறப்பு
#India
#Tamil Nadu
#water
#Breakingnews
Mani
2 years ago

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், நாளை மாலை அல்லது நாளை மறுநாள் அதிகாலையில் தமிழக எல்லையில் அமைந்துள்ள பிலிகுண்டு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ் அணைக்கான நீர்வரத்து 9 ஆயிரத்து 514 கன அடி நீர் வரத்து இருப்பதால், 2 ஆயிரத்து 500 கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கபினி அணைக்கு 13,114 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில், அணையில் இருந்து 2,146 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 800 கனஅடி நீர்வரத்து உள்ளது.



