இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 8,000 கோடி ரூபாய் இழப்பு முதல்வர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்
#India
#Flood
#Breakingnews
#ChiefMinister
Mani
1 year ago

இமாச்சலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இத்தகவலை அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் கூறியதாவது:
இமாச்சலப் பிரதேசம் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை மற்றும் வெள்ளப் பேரிடரை தற்போது சந்தித்து வருகிறது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 8,000 கோடி ரூபாயை எட்டும். இதற்காக மத்திய அரசு உடனடியாக நிதியுதவி வழங்கிட வேண்டும். மழையினால் சேதமடைந்த சாலைகள், மின்சாரம், நீர் விநியோகம் ஆகியவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



