ஆந்திராவில் கோர விபத்து: பேருந்து மீது லொறி மோதி 6 பேர் உயிரிழப்பு
#India
#Death
#Accident
#Bus
#Breakingnews
Mani
2 years ago

இன்று மாலை ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
கடப்பாவில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசுப் பேருந்து, அன்னமயா மாவட்டம் புள்ளம்பேட்டை அருகே சென்றபோது, பக்கவாட்டில் இருந்து அதிவேகமாக வந்த சிமெண்டு லாரி, பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் சிதைந்தது. மோதிய வேகத்தில் லாரி கவிழ்ந்தது.
பேருந்தில் பயணம் செய்த 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.10மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து ராஜம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து குறித்து புள்ளம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



