டெல்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

#India #Airport #Delhi #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
டெல்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 21ம் தேதி பயணிகளாக வந்த தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 பேரும் வந்தடைந்தனர்.

அவர்கள் மூவரும் இஸ்தான்புல் நகருக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அவர்களிடம் நடந்த சோதனையில் போது வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றில் 7.2 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 4 லட்சத்து 66 ஆயிரத்து 200 யூரோக்கள் என மொத்தம் இந்திய மதிப்பில், 10 கோடியே 6 லட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சுங்கச் சட்டம், 1962, பிரிவு 110ன் கீழ் அதிகாரிகள் கைப்பற்றிய அதிகபட்ச தொகை இதுவாகும், மேலும் அவர்கள் தற்போது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!