அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்!

#India #Earthquake #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. நேற்று மணிப்பூர், ராஜஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த தொடர் நிலநடுக்கங்கள் வடகிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை 6:56 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், தவாங்கின் கிழக்கு-தென்கிழக்கே 64 கிமீ தொலைவில் மையமாக கொண்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல்  இன்னும் கிடைக்கவில்லை.

முன்னதாக நேற்று மணிப்பூர் மாநிலம் உக்ருல் பகுதியில் அதிகாலை 5.01 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.5 ரிக்டர் அளவாக பதிவானது. அதேபோல்,ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று அதிகாலை அரை மணி நேரத்தில் மூன்று நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4