கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

#India #Corona Virus #China #Tourist #America #Japan #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு வேகமாக உலகம் முழுவதும் பரவியது. எனவே இதனை கட்டுப்படுத்த வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து, படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இதனால், சுற்றுலாத்துறையில் சற்று ஏற்றம் கண்டு வருகிறது.

ஜனவரி முதல் ஜூன் வரை ஜப்பானுக்கு 1 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தென்கொரியாவில் இருந்து சுமார் 31 லட்சம் பேர், தைவானில் இருந்து 17 லட்சம் பேர் வந்துள்ளதாகவும் அந்த நாட்டின் சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!