ஜெய்ப்பூரில் நிலநடுக்கம் 4.4 ஆக ரிக்டர்அளவுகோலில் பதிவு

#India #Earthquake #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
ஜெய்ப்பூரில் நிலநடுக்கம் 4.4 ஆக ரிக்டர்அளவுகோலில் பதிவு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் ஏற்பட்ட எதிர்பாராத விதமாக நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் உயிர்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4