ஒரு கிலோ மாவில் இருந்து நிறுவனங்கள் எப்படி 45 ரூபாய் லாபம் ஈட்ட முடியும்?
விவசாயியை பாதுகாக்கும் போர்வையில் அரசாங்கம் பாரிய நிறுவனங்களை பாதுகாப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க நேற்று குற்றம் சுமத்தியுள்ளார்.
வரிவிதிப்பின் மூலம் மாவு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் அனுமதிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், விவசாயிகளை பாதுகாப்பதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்யானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை ,குறைந்த விலையில் கோதுமை மாவை நாட்டிற்கு இறக்குமதி செய்வது நாட்டின் நெற்செய்கையாளர்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவை நேரடியாக இறக்குமதி செய்யும் சந்தை விலையை குறைக்காததால், தமக்குக் கிடைக்கும் அதிக இலாபத்தை அரசாங்க வருமானத்துடன் சேர்ப்பதற்காக, அதன் பலன் நுகர்வோருக்கு வழங்கப்படுவதில்லை என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.