கிளிநொச்சி மாவட்டத்தில் போஷாக்கு உலருணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம்

#SriLanka #Kilinochchi #people #Food
Prasu
2 years ago
கிளிநொச்சி மாவட்டத்தில் போஷாக்கு உலருணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம்

உலக உணவுத் திட்டமானது கிளிநொச்சி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில், போஷாக்கு உலருணவு நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களிற்கும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜெராட் ரெபெல்லா அவர்களிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று(20) வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 11.30மணியளவில் இடம்பெற்றது.

images/content-image/1689871758.jpg

இந்த திட்டத்தின் மூலம் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்கள் உள்வாங்கப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகள், நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், அதிதீவிர நிறைகுறைவுடைய இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், கணவனை இழந்த கணவனால் கைவிடப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், குறைந்த பொருளாதார வசதியுடைய குடும்பங்கள் என்ற வகைகளில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு போஷாக்கு உலருணவு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உலருணவுப் பொதிகளை வழங்கவுள்ளது.

இதன்போது, குறித்த திட்டம் தொடர்பாக அறிமுக உரையினைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

images/content-image/1689871780.jpg

இக் கலந்துரையாடலில் உலக உணவு திட்டத்தின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜெராட் ரெபெல்லா, உலக உணவுத் திட்ட அரச இணைப்பாளர் நியமத் முஸ்தபா, உலக உணவு திட்டம் அதிகாரிகள், நிகழ்ச்சி திட்ட உதவியாளர், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், கரைச்சி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ராஜ்வினோத், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

images/content-image/1689871797.jpg

images/content-image/1689871815.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!