இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி
#India
#SriLanka
#Ranil wickremesinghe
Prathees
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இடையே கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு சில நிமிடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (20) பிற்பகல் இந்தியாவிற்கு பயணமானார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
இந்திய விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.