யாழ்ப்பாணத்தில் 'உயிர்த்தெழும் பூமி வேளாண்மை' எனும் விவசாய பயிற்சி பட்டறை

#SriLanka #Jaffna #யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில்  'உயிர்த்தெழும் பூமி வேளாண்மை' எனும் விவசாய பயிற்சி பட்டறை

 'உயிர்த்தெழும் பூமி வேளாண்மை' என்ற தொனிப்பொருளிலான இயற்கை விவசாய பயிற்சி பட்டறை ஆளவாழ்தல் அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்றும் நேற்றும் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.


 'உயிர்த்தெழும் பூமி வேளாண்மை' எனும் தொனிப்பொருளில் அமைந்த இன்றைய பயிற்சிப் பட்டறையின்போது, இயற்கை விவசாய செய்முறைகள் முக்கிய விடயமாக பேசப்பட்டது.

 வட மாகாண பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் தலைமையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் இத்தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறை வளவாளராக இந்திய விவசாய ஆர்வலர் மாரிமுத்து ரேவதி அம்மையார் பங்கேற்று, செயன்முறையுடன் கூடிய பயிற்சியினை வழங்கினார்.

 இவர் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நேரடியாக விவசாயம் தொடர்பான கள விஜயம் மேற்கொண்டுள்ளார். அத்துடன், பல சர்வதேச பல்கலைக்கழகங்களில் சூழல்நேயமான நிலைபேறான விவசாய செயற்பாடுகள் தொடர்பான கருத்தரங்குகளை மேற்கொண்டு வருபவர் ஆவார்.

 இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண விவசாயப் பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் கலந்துகொண்டார். இப்பயிற்சிப் பட்டறையில் மண்ணை புதுப்பித்தல், நீர் முகாமைத்துவம், வினைத்திறனான சக்திப் பயன்பாடு, பயிர் முகாமைத்துவம், அறுவடையும் அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்பங்களும் மற்றும் சந்தை முகாமைத்துவம் என பல கோணங்களில் புத்துயிர்ப்பூட்டும் விவசாயக் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.

 மேலும் இப்பயிற்சிப் பட்டறையில் விவசாயிகள், விவசாய ஆர்வலர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டு அதனை சிறப்பித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!