மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

#India #Death #Tamilnews #Breakingnews #Died #ImportantNews
Mani
2 years ago
மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

தென்மேற்கு பருவமழையின் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, புனே மற்றும் மும்பையில் தற்போது அதி கனமழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்கள் உள்ளன. இதனால் நிலச்சரிவில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி மொத்தம் 25 பேர் நிலச்சரிவில் இருந்து காப்பாற்றப்பட்ட நிலையில், 4 பேர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட அறிக்கையின்படி 21 பேர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தகவலறிந்து முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே ராய்காட் மாவட்டம் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சட்டசபையில் நிலச்சரிவு குறித்து பேசிய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். மீட்புப் பணிகள் மேற்கொண்டு வருவது பற்றி விளக்கிய அவர், உள்துறை மந்திரியிடம் தற்போதைய நிலவரம் குறித்து தகவல் தெரிவித்துள்ளோம் என கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!