துபாயில் ஏஐக்கள் வீதியிலுள்ள குறைபாடுகளை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது

கார்களில் கேமராக்களை இணைத்து, அத்துடன் லேசர் ஸ்கேர்களைப் பயன்படுத்தி, துபாய் நாட்டில் வீதிகளின் மேற்பரப்பை ஸ்கேன் செய்து அதனை பாரமரிக்கும் ஏஐ தொழில்நுட்பம் இப்போது செயற்படுத்தப்படுகிறது.
பேவ்மென்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்ற தொழில்நுட்பத்தை, ரோந்து வாகனங்களில் நிறுவப்பட்டு, வீதிகளின் நிலை குறித்த தகவல்களை சேகரிக்க நகரத்தின் நெடுஞ்சாலைகளை லேசர் ஸ்கேன் செய்து இந்த வாகனங்கள் சுற்றி வருகின்றன.
இந்த அமைப்பு உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் லேசர் ஸ்கேனர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏஐ லேசர் ஸ்கேனர், அந்த வீதிகளின் பரப்புகளில் பதின்மூன்று வெவ்வேறு விதமான குறைபாடுகளைக் கண்டறிய முடியும்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வீதிகளில் 1 மிமீ அளவுக்கு சிறியதாக இருக்கும் விரிசல்களை கூட இந்த ஏஐ கணினி கண்டறியும். விரிசல்களின் அகலம், ஆழம் மற்றும் அது உருவாகி இருக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஏஐ அல்காரிதம்களைப் பயன்படுத்தி கணினி நிகழ்நேரத்தில் தரவை சேகரிக்கிறது.
இந்த அமைப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியாளர்களுக்கான விரிவான அறிக்கைகளை வழங்கி, அவர்கள் இந்த தகவல்களின் அடிப்படையில் வீதிகளை பழுதுபார்க்க முடியும். இச்செயன்முறை, சிறிய விரிசல்களை ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது பராமரிப்புச் செலவுகளை வெகுவாக குறைக்க உதவுகிறது.



