அல்ஜீரியாவில் பஸ்-கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உடல் கருகி உயிரிழப்பு
#India
#Accident
#world_news
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago
ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில், டமன்ராசெட் மாகாண சாலையில் ஒரு பேருந்து பயணிகளை ஏற்றிச் சென்றது. அதிகாலையில், கிராமப்புற சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அடோல், சாலையில் முன்னால் சென்ற கார் மீது மோதி, பின்னர் விபத்துக்குள்ளானது.
பேருந்து கவிழ்ந்து உடனடியாக தீப்பிடித்து எரிந்ததால், உள்ளே சிக்கியிருந்த பயணிகள் உதவிக்காக அலறினர். இந்த சம்பவத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.