பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கியுள்ளதாக ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (20.07) கூடிய ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் விற்பனையை விரைவுபடுத்தும் பணிப்பாளர் சபையின் சதியால் தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக திரு.ரியாஸ் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.