நம்பிக்கையில்லா பிரேரணை : ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு சஜித் சவால்!

#SriLanka #Keheliya Rambukwella #Lanka4
Thamilini
2 years ago
நம்பிக்கையில்லா பிரேரணை : ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு சஜித் சவால்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு  எதிராக தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20.07) கையெழுத்திட்டுள்ளார்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தல், அதனால் ஏற்பட்ட  உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு  இந்த நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையில் ரஞ்சித் மத்துமபண்டார, லக்ஸ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, குமார வெல்கம உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு  நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.

இது குறித்து பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் எனத் தெரிவித்தார். 

அதேபோன்று, ஒரு நாட்டின் ஆரோக்கியமே மக்களின் வாழ்க்கை என்றும், சுகாதார சீர்கேடு மக்களின் வாழ்க்கை சீரழிவதற்குக் காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!