மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று வன்கொடுமை

#world_news
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று வன்கொடுமை

இந்தியா - மணிப்பூரில் கலவரம் தொடர்ந்து வரும் நிலையில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்து சென்று சிலர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மணிப்பூர் எனும் இடத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்த நிலையில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த வன்முறை 3 மாதங்கள் ஆகியும் முடிவுக்கு வரவில்லை.

 இந்நிலையில் பழங்குடியின பெண்கள் இருவரை எதிர் தரப்பு கும்பல் நிர்வாணமாக இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேகசந்திரா சிங் “கடந்த 24 மணி நேரமாக மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. 

இருப்பினும் சில இடங்களில் துப்பாக்கிச்சூடு, கலவரங்கள் தொடர்கிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை தேடி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!