ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைன் போரில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படுகிறதா?
#world_news
#Russia
#Ukraine
#War
Mugunthan Mugunthan
2 years ago
ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை பிரட்டன் உளவு அமைப்பான எம்ஐ6 இன் தலைவர் ரிச்சர்ட் மூரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து செக் குடியரசில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவா், ஏஐ தொழில்நுட்பத்தை எதிரி நாடுகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்துவதில் மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள் இனி கூடுதல் கவனம் செலுத்தும் என்றாா்.
மேலும்,உளவுப் பணிகளை மேற்கொள்ள மனிதா்களுக்குப் பதில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது என்றும் அவா் உறுதியளித்தார்.