அகமதாபாத்தில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதிய விபத்தில், போலீஸ் அதிகாரி உட்பட 9 பேர் உயிரிழப்பு

#India #Death #Accident #Tamilnews #Died #ImportantNews
Mani
2 years ago
அகமதாபாத்தில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதிய விபத்தில், போலீஸ் அதிகாரி உட்பட 9 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்-எஸ்ஜி நெடுஞ்சாலையில் அதிகாலை 1.15 மணியளவில் இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இதனைத் தொடர்ந்து மீட்புப்பணிக்காக போலீசாருடன் அங்கிருந்த மக்கள் சிலர் ஈடுபட்டனர்.

அப்போது, ​​அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் ஒன்று, அருகில் இருந்த மக்கள் மீது மோதியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் காவலர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4