பாராளுமன்ற அமர்வுகள் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளன!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (20.07) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இதற்காக அவை நடவடிக்கைகள் பிரதி சபாநாயகர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் சபை அமர்வுகள் மலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
அதன் பிறகு, அத்தியாவசியப் பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் விவாதம் இன்றி தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளது.
மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை அரசு தரப்பில் கொண்டு வரப்பட்ட பிரேரணை மீது பேரவை ஒத்திவைப்பின் போது விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வங்கி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நாளை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.