டில்மா தேயிலையின் நிறுவனர் மெரில் காலமானார்!

#SriLanka #Death #Tea
Mayoorikka
2 years ago
டில்மா தேயிலையின் நிறுவனர்  மெரில் காலமானார்!

டில்மா தேயிலையின் நிறுவனர் மெரில் ஜே. பெர்னாண்டோ தனது 93வது வயதில் காலமானார் என குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 பெர்னாண்டோ இலங்கை தேயிலை நிறுவனமான டில்மாவின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

 பெர்னாண்டோ 2019 இல் டில்மாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார், அவருக்குப் பிறகு அவரது மகன் தில்ஹான் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார்.

 மெரில் பெர்னாண்டோ 1930 ஆம் ஆண்டு மே மாதம் நீர்கொழும்பு பல்லன்சேனையில் பிறந்தார். தேநீர் சுவையாளராக பயிற்சிக்காக சேர்க்கப்பட்ட ஆறு மாணவர்களின் முதல் குழுவில் இவரும் ஒருவர். 1974ஆம் ஆண்டு மெரில் ஜே.பெர்னாண்டோ­வினால் டில்மா (சிலோன் டி சர்விஸ் பி.எல்.சி) ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

ஐக்­கி­ய ­இ­ராச்­சியம், துருக்கி, தென்­னாபி­ரிக்கா, பாகிஸ்தான், லித்­து­வே­னியா, போலந்து ஹங்­கேரி, கனடா உட்­பட உலகில் பெரும்­பான நாடு­களில் டில்மா தடம் பதித்­துள்­ளது.

 தூய்­மை­யான முறையில் உயர் தரத்­துடன் ஏற்­று­மதி செய்­ய­ப­டு­வதால் அவுஸ்தி­ரே­லியா, நியூ­சி­லாந்து உட்­பட்ட 100க்கும் அதி­க­மான நாடு­களில் டில்மா வர்த்தக நாமம் பொறிக்­கப்­பட்ட தேயி­லைக்கு அதிக கேள்வி காணப்­ப­டு­கி­றது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!