டில்மா தேயிலையின் நிறுவனர் மெரில் காலமானார்!
டில்மா தேயிலையின் நிறுவனர் மெரில் ஜே. பெர்னாண்டோ தனது 93வது வயதில் காலமானார் என குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பெர்னாண்டோ இலங்கை தேயிலை நிறுவனமான டில்மாவின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
பெர்னாண்டோ 2019 இல் டில்மாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார், அவருக்குப் பிறகு அவரது மகன் தில்ஹான் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார்.
மெரில் பெர்னாண்டோ 1930 ஆம் ஆண்டு மே மாதம் நீர்கொழும்பு பல்லன்சேனையில் பிறந்தார். தேநீர் சுவையாளராக பயிற்சிக்காக சேர்க்கப்பட்ட ஆறு மாணவர்களின் முதல் குழுவில் இவரும் ஒருவர். 1974ஆம் ஆண்டு மெரில் ஜே.பெர்னாண்டோவினால் டில்மா (சிலோன் டி சர்விஸ் பி.எல்.சி) ஆரம்பிக்கப்பட்டது.
ஐக்கிய இராச்சியம், துருக்கி, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், லித்துவேனியா, போலந்து ஹங்கேரி, கனடா உட்பட உலகில் பெரும்பான நாடுகளில் டில்மா தடம் பதித்துள்ளது.
தூய்மையான முறையில் உயர் தரத்துடன் ஏற்றுமதி செய்யபடுவதால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட்ட 100க்கும் அதிகமான நாடுகளில் டில்மா வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட தேயிலைக்கு அதிக கேள்வி காணப்படுகிறது