பெருவில் ஜனாதிபதிக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்!

பெருவில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து அந்நாட்டின் ஜனாதிபதி டினா போலுவார்டேக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று (19.07) இடம்பெற்ற இந்தபோராட்டத்தில் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆழமான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தள்ளனர்.
இந்நிலையில் இந்த போரட்டத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில், பொலிஸார் கண்ணீர் புகை்குண்டுகளை பிரயோகித்து போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.
உள்ளூர் ஊடக அறிக்கைகள் படி, நிலைமையை கண்காணிக்க, போலீசார் தண்ணீர் பீரங்கி மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதாகவும், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களை உள்ளடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், "பொலுவார்ட் வெளியேறு" எனக் கோஷங்களை எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



