நியூசிலாந்தில் துப்பாகிச்சூடு - இருவர் உயிரிழப்பு ஐவர் காயம்!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
நியூசிலாந்தில் துப்பாகிச்சூடு - இருவர் உயிரிழப்பு ஐவர் காயம்!

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் இன்று (20.07) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிதாரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை எனவும், போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும், அந்நாட்டி பிரதமர் தெரிவித்துள்ளார். 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எப்படி இறந்தார் அல்லது அவரது நோக்கம் குறித்து தெரியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!