நால்வருக்கு உயிர்கொடுத்த மூளைச்சாவடைந்த பெண்: முதன்முதலாக நடந்த அறுவை சிகிச்சை

#SriLanka #Hospital #Surgery
Prathees
2 years ago
நால்வருக்கு உயிர்கொடுத்த மூளைச்சாவடைந்த பெண்:  முதன்முதலாக  நடந்த  அறுவை சிகிச்சை

உடுகம வைத்தியசாலையில் நேற்று (18) மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரின் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் வேறொரு நான்கு நோயாளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

 உடுகம வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் சுசந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். உடுகம வைத்தியசாலை வரலாற்றில் மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரிடமிருந்து உறுப்புகள் சேகரிக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

 2/169இ நயடோல, அலபலதெனியவில் வசிக்கும் எல். பிரேமாவதி என்ற பெண்ணே தனது உடல் உறுப்புகளைக் கொடுத்து இந்த மாபெரும் தொண்டுக்கு பங்களித்தார். இதற்கு அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 இறந்தவரின் உடல் உறுப்புகள் பிக்கு உட்பட மூவருக்கு மாற்று சிகிச்சைக்காக தேசிய உறுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்தார்.

 பிரேமாவதி மூளை நரம்பு வெடித்து ரத்தம் கசிந்ததால் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!