உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா செல்கிறார் ரணில்!

#SriLanka #Ranil wickremesinghe
Thamilini
2 years ago
உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா செல்கிறார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (20.07) இந்தியா செல்லவுள்ளார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இந்திய அரசுக்கும் இலங்கைக்கும் இடையே கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பல சிறப்பு கலந்துரையாடல்கள் இந்த விஜயத்தினபோது  நடைபெற உள்ளன.  

அத்துடன்  இந்தியப் பிரதமர் மற்றும் ஏனைய பிரமுகர்களைச் சந்தித்து, இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் போது வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் நீண்ட காலத்திற்கு அத்தகைய விநியோகங்களைத் தொடர்வது தொடர்பாக புதிய கலந்துரையாடல்களை ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்   இரு நாடுகளுக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு உட்பட பல விசேட பிரதிநிதிகளை சந்திக்கவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!