600 மருந்துகளில் 02 மருந்துகள் தரப்பரிசோதனையில் தோல்விடையந்துள்ளன!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 600 மருந்துகளில் 02 பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் தர சோதனை தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு கண் வைத்தியசாலையில் குறித்த மருந்தில் பாக்டீரியா கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க நேற்று (19.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், " எங்களிடம் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த சில மருந்துகள் உள்ளன. கண் மருத்துவமனையில் மட்டும் தான் இந்த மருந்தை நாங்கள் கண்டறிந்தோம்.
அந்த மருந்தில் பக்டீரியா இருந்துது. தற்போது அந்த மருந்து பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் சில மருந்துகளை தற்காலிமாக நிறுத்தியுள்ளோம். அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.