மீண்டும் ஜப்பான் கடலை நோக்கி ஏவுகணை சோதனை மேற்கொண்ட வட கொரியா

#NorthKorea #Missile #Japan #Ocean
Prasu
2 years ago
மீண்டும் ஜப்பான் கடலை நோக்கி ஏவுகணை சோதனை மேற்கொண்ட வட கொரியா

வட கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் நிலையில் தென் கொரியா அமெரிக்காவுடன் கைகோர்த்து பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்துள்ளது வட கொரியாவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இதனால் தொடர்ந்து வட கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில் திட எரிபொருளால் இயங்கும் குவாசாங்-18 என்ற ஏவுகணையை அண்மையில் வட கொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது. 

இந்த சோதனையை நடத்தி ஒரே வாரத்திற்குள் மீண்டும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஜப்பான் கடலை நோக்கி வட கொரியா சோதனை செய்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!