தெற்கு அல்ஜீரியாவில் பேருந்து விபத்து : 34 பேர் உயிரிழப்பு!
#world_news
#Lanka4
Thamilini
2 years ago
தெற்கு அல்ஜீரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயணிகள் பேருந்து ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் பின்னர் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகணை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.