உயர்தர பரீட்சார்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான பொதுத் தராதர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 28 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறித்த திகதிக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.