அவுஸ்திரேலியா - குயின்லாந்தில் தொடர் வாகன விபத்தில் 3 வாகனம் தீக்கிரை

#Australia #Accident #world_news #விபத்து #வாகனம் #vehicle
அவுஸ்திரேலியா - குயின்லாந்தில் தொடர் வாகன விபத்தில் 3 வாகனம் தீக்கிரை

அவுஸ்திரேலியாவின் குயின்லாந்தில் ஏற்பட்ட பல வாகனங்கள் தொடர்புபட்ட விபத்து இடம்பெற்ற வேளை அமெரிக்க டாங்கிகளை கொண்டு செனற வாகனமும் இந்த விபத்தில் சிக்கிக்கொண்டது.

இந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அமெரிக்காவின் ஏபிரகாம் டாங்கிகளை ஏற்றிச்சென்ற டிரக்கும் சிக்குண்டுள்ளது என்பதை அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களம் உறுதி செய்துள்ளது.

 எட்டு வாகனங்களுக்கு மேல் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய காவல்துறையினர் நாங்கள் அந்த பகுதிக்கு சென்றவேளை மூன்று வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தனவெனவும்  மூன்று வாகனங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப்பகுதியை குயின்லாந்து காவல்துறையினர் விசேட வலயமாக பிரகடனம் செய்துள்ளனர். இவ்விபத்தில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் ஒருவரின் நிலை கடுங்காயங்களுக்குள்ளாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!