பொலிசார் முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற தந்தை!
சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் யாழ்.அச்சுவேலிப் பொலிஸார் அதனைத் தவிர்த்துவந்ததாகத் தெரிவித்து அச்சுவேலி பொலிஸாருக்கு முன்பாக கடந்த 17ஆம் திகதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த இவருடைய மகள் ஒருவர் பொய்க் கதைகளைப் பரப்பிய வழக்கு தொடர்பாக பொலிசார் சட்டத்தை அமுல்படுத்தத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளிக்க முயன்றுள்ளார்.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்யுமாறு யாழ்.நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் பொலிசார் அவர்களை கைது செய்யாமல் சுதந்திரமாக நடமாட இடம் வழங்கியதாக தீக்குளித்த நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், மண்ணெண்ணெய் உடலில் ஊற்றிக் கொண்ட நபர் தீக்குளிக்க முற்பட்ட போது பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று உடனடியாக ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்து அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.