அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
அம்பலாந்தோட்டை கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (19.07) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொக்கல்ல வடக்கு கட்வார பகுதியில் உள்ள வீடொன்றுக்கு இன்று காலை இனந்தெரியாத மூவர் குறித்த வீட்டில் இருந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் இந்த கும்பலை பார்த்து அலறியதும், குறித்த சிறுமியின் தந்தை வெளியே வந்து பார்த்துள்ளார். இதன்போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் 62 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.