ராஜஸ்தானில் இருந்து டெல்லி புறப்பட்டபோது விமானத்தில் செல்போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கம்
#India
#Flight
#2023
#Tamilnews
#ImportantNews
Mani
2 years ago

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் புறப்படும் போது திடீரென பயணி ஒருவரின் செல்போன் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் புகை வந்ததை தொடர்ந்து விமானி விமானத்தை அவசரமாக தரை இறக்கினார்.
விமானத்தில் மொத்தம் 140 பயணிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, விமானம் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அனைத்தும் சீரானதும் டெல்லிக்கு பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.



