ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பதற்றநிலை
#SriLanka
#students
#University
Prathees
2 years ago
ஊவா வெல்லஸ் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் இரு குழுக்களுக்கிடையில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக இரண்டாம் வருட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றுவதற்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இருதரப்பு மாணவர்களுக்கிடையிலான முரண்பாடு மோதலாக மாறுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வேந்தர் மஹாச்சார்யா ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.