நீர் கட்டணங்களை திருத்த அமைச்சரவை ஒப்புதல்!
நீர் மற்றும் கழிவுநீர்க் கட்டணங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும், மற்றும் கல்வி தொடர்பான சமூகப் பாதுகாப்புத் தளத்தை மாற்றியமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான அணுகலை விரிவுபடுத்துதல், சேவையின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் நீர் ஆதாரங்களின் நிலையான பயன்பாடு ஆகியவற்றின் நோக்கங்களை அடைய, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் (NWSDB) நிதி நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.